Ads 468x60px

Friday, March 30, 2012

தொலைத்ததைத் தேடுகிறோம் ....

கோடி கோடியாய்ச் சேர்த்தாலும் , மாடி மாடியாய்க் கட்டினாலும்  , பதவி பதவியாய் வந்தாலும் .  உண்ண உணவு , குடியிருக்க குடியிருப்பு , உறங்க உறைவிடம் இதைத் தவிர மனிதன் தேடுவதெல்லாம் நிம்மதியே .
          பொன்மீது அமர்ந்திருந்து , பணத்தின் மேல் துயில் கொண்டு பறி கொடுத்த நிம்மதியைத் தேடியோடும் வாழ்க்கையிது .  உறவுகளின் ஆரம்பம் பெற்றவரின் பாசத்தில் . கருவாகி , உருவாகி  உதிரம் உண்டு வளர்ந்து காற்றின் உறவாகும்  வரை வாழ்வில் சுமையில்லை!
       தொப்புள் கொடியுறவை ஏற்று புதுவாழ்க்கை,  ஆனாலும் முத்தாடி , தாலாட்டி , சீராட்டி , பாலூட்டி வளர்ப்பதற்கும்,  "தாய்"!  உண்டாயா ? உறங்கினாயா ? கற்றாயா ? கேட்டாயா ? பார்த்தாயா ? என்று, கேள்வி கேட்டு பாதை மாறிப் போகாமல் பயணம் தொடர்ந்து செல்ல அறிவூட்டும் தந்தை!
     
என் பேரன் , என் பேத்தி எனக் கொஞ்சி,  ஊர்க் கதை , உறவின் முறை கூறித் தந்து , மாய்ந்து போன கலாச்சாரம் , மடிந்தொழிந்த சரித்திரங்கள்
பாட்டி வடை  சுட்ட கதை ,நரி வந்து ஏய்த முறை ,முயல் ஆமை இடம் தோற்றுப் போன பாடம் ,குரங்கு குருவிக்  கூட்டைப் பொறாமையால் பிரித்தெரிதல் !

தும்மினால் 'குரு மிளகு  ' ,  வயிறு பொருமினால் ,'கசகசா' , தொண்டை  செருமினால் 'வெற்றிலை ' , உடற் சூடு என்றால் 'வெந்தயம்' கண்பேறு சுற்றிப் போடல் , தீண்டேன்றால்  படிகாரம் , காலை எழுந்து பல்துலக்கி , பானைத் தண்ணீர்  குடிக்க வேண்டும் . பெண் மஞ்சள் பூசி நின்று கட்டாயம் குளிக்க வேண்டும் .  கோவில் வழிபாட்டில் புதைந்து கிடக்கும் சத்தியங்கள் , கை நெல் குத்தி எடுத்து  கொடுக்கும் சத்து சாதங்கள் !  பூப்பெய்து பெண் மலந்தால் அதற்க்கொரு சீராட்டு , மாமன் உறவின் மகத்துவங்கள் , குடும்பம் நடத்தப் பாடங்கள் , சமையல் செய்யப்  பயிற்சிகள் , குடும்பம் கூடி வாழ அரவணைக்கும் தந்திரங்கள் . அன்பு மந்திரங்கள் !

      கிழவன் இருந்த வரை வீடே  வெளிச்சமாய்,  காலையில் காடு சென்று கொண்டுவந்த காய் , கனிகள் !.  கிழவி வாழும் வரை ஆயிரம் பேர் வந்தாலும் மலர்ந்த முகத்தோடு பரிமாறிய பக்குவங்கள்,  இப்படி சொல்லி மாய்ந்த பெற்றோரே  , இப்போது பிள்ளைகளை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கும்  காலம் இது . தாயிழந்த குஞ்சுகள் போல் நாம் .

        கிராமங்கள் நகரமாக , மனங்கள் நரகமாக , உறவுகள் பொய்யாக , உளுத்துப் போன காலங்கள் . நோய்கள் பெருகியிங்கே, உண்மை விடை பெற்று,  தீமைகள் விளைச்சல்களாய் .  நாளை எதை உண்போம் , மாத்திரையா ? காற்றையா ? புரியவில்லை .
அழகான குடிசையிலே,  அன்பான இதயங்களோடு,  பண்பான வாழ்வு வாழ்ந்து , இயற்கையை அனுபவித்து , காடு , மேடு , ஓடியாடி , துள்ளித் திரிந்த கிழ உறவுகளை இப்போது மனம்தேட ...
       அவர்களும் நாகரீக மோகம் தேடிப்போக . கூடு சிதைந்திங்கே,  குஞ்சுகள் ஏக்கத்தோடு!  விரட்டியதும் நாம்தான் , தேடுவதும் நாமேதான் . இழந்தது கிடைத்திடுமா ?
பெற்ற பிள்ளைகளின் வாழ்வொன்றே இலட்சியம் என்று வாழ்ந்த மக்களின் மனம்   கூட்டுக் குடும்பத்தில் லயித்திருந்தது .  பேரப்பிள்ளைகளின் அன்பில் உலகை மறந்து சகிப்புத் தன்மையோடும்  , விட்டுக்கொடுத்தும் வாழ்ந்த முதியோர்களைத் தேடும் காலமிது .
        வம்பெதற்கு என பிறந்த பிள்ளைகளையும்     விட்டு தனித்து நிற்கின்ற நிலை  வளர்த்ததுதான்  நாகரீகமா ?
     தனிக்குடித்தனம் என்ற பெயரில் .  சிறகு முளைத்த பறவைகளை கூடு விட்டு விரட்டுவது ஏனோ ? 
இத்தனை காலம் அடிமையாய் வாழ்ந்து விட்டோம் இனி அது தேவையில்லை என்று அடிமை விலங்கொடித்து முதியோர்கள் சிந்தித்ததின் விளைச்சல் இது தானோ ?  கூட்டுக் குடும்பங்களும் இல்லை . கூட்டுறவும் இல்லை . 

31 comments:

 1. தொலைத்ததை
  தேடுவதல்ல நல்ல வாழ்க்கை
  இருப்பதை தக்கவைத்துக்கொள்வதே
  சிறந்த வாழ்க்கை

  மெய் உணர்ந்தால்
  வாழ்க்கை இனிமை

  நன்றி தோழி

  ReplyDelete
 2. கிராமங்கள் நகரமாக , மனங்கள் நரகமாக , உறவுகள் பொய்யாக , உளுத்துப் போன காலங்கள் . நோய்கள் பெருகியிங்கே, உண்மை விடை பெற்று, தீமைகள் விளைச்சல்களாய்...
  -வீரியமிக்க வசந்தவரிகள் தென்றலே. தொலைத்ததைத் தேடிக் கண்டெடுத்து மீட்டு வாழ்ந்தால் நலமே என்றும். உங்கள் சீரிய சிந்தனை மனதைத் தொடுகிறது.

  ReplyDelete
 3. தொலைத்ததைத் தேடுகிறோம் தொலைத்த இடத்தைவிட்டுவிட்டு!!
  தொலைத்த இடத்திலேயே தொடர்ந்து தேடினால் நிச்சயம் நாம் தொலைத்தது அனைத்தும் மீண்டும் கிடைக்கும்.
  உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

  ReplyDelete
 4. இன்ற காலக்கட்டத்தில் அதிசயிமான அனைத்தையும் நாம் இழந்துக்கொண்டிருக்கிறோம்..

  எல்லாம் மனித குலம் அழிவிக்கே வழிவகுக்கும்...

  உறவுகளில் கூட தற்போது அன்னோனியம் இல்லாமல் இருக்கிறது.


  நல்லதொரு பதிவு

  ReplyDelete
 5. ஒரு பொருத்தம் பார்த்தீர்களா.இன்று என் பதிவின் தலைப்பு’தேடல்’.உங்கள் தலைப்பு’தொலைத்ததைத் தேடுகிறோம்.’புத்திசாலிகள் ஒன்று போல் சிந்திக்கிறார்கள்!(வேறு ஏதாவது சொல்லி விடாதீர்கள்.
  நன்று!

  ReplyDelete
 6. விஞ்ஞான வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சியால் எத்தனை நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம்.கிடைக்குமா இனி !

  ReplyDelete
 7. கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலம் போய், குளவிக் கூடாய் தனிக் குடும்பமாய், மாறிவிட்ட கொடுமையைச் சாடும் கவிதை!

  ReplyDelete
 8. ''...இத்தனை காலம் அடிமையாய் வாழ்ந்து விட்டோம் இனி அது தேவையில்லை என்று அடிமை விலங்கொடித்து முதியோர்கள் சிந்தித்ததின் விளைச்சல் இது தானோ ?...''ஆம் அப்படியும் இருக்கலாம்... நல்ல ஆதங்கம் சசிகலா....நல்ல இடுகை.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. உண்மைதான்

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  ReplyDelete
 10. மனதை தொட்ட மிக மிக அற்புதமான படைப்பு.
  மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை

  ReplyDelete
 11. உண்மை தோழி!

  இழந்து விட்டோம்-
  எத்தனையோ!

  புரிய வைத்தது-
  உங்கள்எழுத்து!

  ReplyDelete
 12. உண்மை தோழி!

  இழந்து விட்டோம்-
  எத்தனையோ!

  புரிய வைத்தது-
  உங்கள்எழுத்து!

  ReplyDelete
 13. அன்புத் தங்கை சசிகலா,
  காலத்தின் கோலங்களில் இதுவும் ஒன்று..
  நம் பண்பாடு சொல்லிக்கொடுத்து அதை விற்று
  நாம் விளையற்றவர்களாய் ஆகிப்போனவைகளுள் ஒன்று தான்
  இந்தக் கூட்டுக்குடும்பம் என்பது.

  பணி நிமித்தம் பிரிந்து சென்றாலும்.. மனமதில் லயிக்க வேண்டும்.
  ஆனால் இன்றைய நிலைமைகளோ அப்படி இல்லை.
  பாரம் சுமக்க முடியாமலும்.. தனக்கென்று தான் எல்லாம் வேண்டும்...
  பெற்றோரும் உடன் பிறந்தோரும் .. எப்படிப் போனால் என்ன
  என்ற மனோபாவமும் தான் இன்றைய தனிக் குடும்பங்கள்
  வளரக் காரணம்.

  அருமையான சிந்தனை.
  அழகான படைப்பு.

  ReplyDelete
 14. கூட்டுக்குடும்பங்களும்,உறவுகளும் புரிதலையும்,நெருக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு சற்று இடைஞ்சலாகவே/
  பல நேரங்களில் பல் வேலைகளுக்கு உதவியாகவும் புரிதலுக்கு துணை இருப்பதாகவும்/
  நாணயத்தின் இரண்டு பக்கம் போல கூட்டுக்குடும்த்தின் அவசியம்/நல்ல பதிவு,வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 15. இதுதவிர பலரது தனித்துவங்களையும் முனைப்பையும் கூட்டுக்குடும்பங்கள் மழுங்கடித்து விடுகிறதுதான்.

  ReplyDelete
 16. செய்தாலி ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 17. கணேஷ் ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 18. வே.நடனசபாபதி ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 19. கவிதை வீதி... // சௌந்தர் ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 20. சென்னை பித்தன் ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 21. ஹேமா...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 22. தி.தமிழ் இளங்கோ ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 23. kovaikkavi...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 24. sathish krish ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 25. Avargal Unmaigal ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 26. Seeni ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 27. மகேந்திரன் ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 28. விமலன்
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 29. ரமணி ...
  ஐயா தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா .

  ReplyDelete
 30. Seshadri e.s.
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி