Ads 468x60px

Wednesday, March 28, 2012

உதாரணங்களாய் ...

      
        துளித்துளியாய் மண்விழுந்து
        ஒற்றுமையாய் எழுந்தோடி,
        பூவுலகம் காத்துநிற்கும்,
        ஆர்ப்பரிக்கும் காட்டாற்றின்,
        ஒற்றுமையும்-பாடம்தான்!

        மலைமேல் குடியமர்ந்து,
        மெதுவாய் பயணம்செய்து,
        கூடியாடும் நேரத்தில்,
        மழையைப் பொழிகின்ற,
        கார்முகிலும் -பாடமதான்!

        விதையாய் மண்ணில் புதைந்து,
        செடியாகி,மரமாகி,காற்றுமாகி,
        உயிர் காற்று மட்டுமின்றி,
        கனிவளமும் ,நிழலும தருகின்ற,
        தியாகமும் உதாரணம்தான்!

        கூட்டம்,கூட்டமாயிணைந்து'
        நாடுவிட்டு,நாடு பறந்துவந்து,
        கூடிவாழும் பறவையினங்கள்,
        சொல்கின்ற வாழ்க்கைப்பாடம்,
        போதிப்பதும் பாச,நேசம்தான்!

        கோடான கோடிகளாய-வானில்,
        சேர்ந்துலவும்  விண்மீன்கள்,
        இரவி்ல்வந்து ஒளிவீசும்,
        இனிய காட்சி வாழ்வுக்கு,
        வழிகாட்டும் அரிய பாடந்தான்!

        தலைவனே இல்லாதிருந்தும்,
        தனக்கென நற்பாதை வகுத்து,
        தேன் சேர்கும் தேனீயும்,
        சாரையாக அணிவகுக்கும்,
        எறும்பினமும் வழிகாட்டிகள்தான்!

        மொழியாய்ப் பிறந்துவந்து,
        வார்த்தையாய் வடிவெடுத்து,
        கவிதையாய் உருவெடுக்கும்,
        கவியின் எண்ணத்தில்-வாழும்,
        உணர்வுகளும்,புதுபாதைதான்!

        அனைத்தையும் ஆள்கின்ற,
        ஆறறிவு பெற்றமனிதன்,
        ஆசையுடன் கைகோர்த்து,
        அழிவைப் பற்றிக்கொண்டு,
        ஒற்றுமையை வேர் அறுக்கலாமா?
        பாடம்தான் படைப்பெல்லாம்,
        படித்து சீரடைவோமா!-இல்லை,
        நாட்டையும்,வீட்டையும்,
        சுடுகாடாய் மாற்றி-மடிவோமா?

47 comments:

 1. தலைவனே இல்லாதிருந்தும்,
  தனக்கென நற்பாதை வகுத்து,
  தேன் சேர்கும் தேனீயும்,
  சாரையாக அணிவகுக்கும்,
  எறும்பினமும் வழிகாட்டிகள்தான்!// nice

  ReplyDelete
 2. மாலதி ..
  உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி .

  ReplyDelete
 3. சொல்லிச் செல்லும் உவமைகளும்
  சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அருமை
  தங்கள் படைப்புகள் அனைத்தும்
  சமூக உணர்வுடனும் வாழ்வியலை
  மிக நேர்த்தியாய் படம் பிடித்துக் காட்டுவதுமாய்
  இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மிக அருமை அக்கா கவிதை சொல்லும் விதம் மிக அழகு

  ReplyDelete
 5. இந்த
  உலகில் உள்ள எல்லாம்
  நமக்கு கற்றுக் கொடுக்கும்
  அத்தாட்ச்சிகளே

  அதன் மெய்யுணர்தல்
  நன்மை

  நல்ல கவிதை அருமை தோழி

  ReplyDelete
 6. ரமணி ...
  ஐயா தங்கள் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி .

  ReplyDelete
 7. Esther sabi ..
  வருக தங்கையே தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

  ReplyDelete
 8. செய்தாலி ...
  தங்கள் உணர்வின் வெளிப்பாடு கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே .

  ReplyDelete
 9. முதன் முறை வருகிறேன்,

  ஒற்றுமைக்கு "உதரணங்களாய்" கண்முன்னே கொட்டிக்கிடக்கும் கா(சா)ட்சிகள்தான் எத்தனை அருமை, உங்கள் பதிவைப்போலவே!!!.


  //அழிவைப் பற்றிக்கொண்டு,
  ஒற்றுமையை வேர் அறுக்கலாமா?
  பாடம்தான் படைப்பெல்லாம்,
  படித்து சீரடைவோமா!-இல்லை,
  நாட்டையும்,வீட்டையும்,
  சுடுகாடாய் மாற்றி-மடிவோமா?//

  சிந்திக்க வைக்கும் வரிகள்!.

  ReplyDelete
 10. //பாடம்தான் படைப்பெல்லாம்,
  படித்து சீரடைவோமா!-இல்லை,
  நாட்டையும்,வீட்டையும்,
  சுடுகாடாய் மாற்றி-மடிவோமா?//
  கவிதையை படித்த பிறகு எனக்கும் சற்று ஆதங்கம்தான், சசி, நாம் எங்கு நோக்கி போகிறோம் என்பதில்....

  ReplyDelete
 11. அன்புத் தங்கை சசிகலா,
  ஆளப்படுபவைகள் இங்கே தங்கள் தொழிலை
  சரியாய் செய்து கொண்டிருக்கையில்
  ஆள்பவன் அதன் மரபு நெறி வழுவுவது
  இடித்துரைக்க வேண்டியவையே...
  நீங்கள் எடுத்துக்கொண்ட உவமைகளும்
  சொல்லிய விதமும் மிக அருமை.

  ReplyDelete
 12. இயற்கையில் எல்லாமே பாடம்தான்.நாம்தான் கற்க மறுக்கிறோம்.

  ReplyDelete
 13. இயற்கை சொல்லும் பாடங்கள் எத்தனையோ.மனிதன் செயற்பாடுகள் தன்பாட்டில் !

  ReplyDelete
 14. padangal valu serkirathu!

  ungal kavithaikku-
  melum azhakaaka sollideenga!

  arputhamaana varikal-
  vaazhthukkal!

  ReplyDelete
 15. இயற்கையில் நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மனிதர்கள்தான் புரிந்து கொள்ள முயலாமல் இருக்கின்றனர். பாடங்கள் படித்துச் சீரடைய வேண்டும் மனிதகுலம் என்பதே நம் விழைவு தென்றல்! கவிதை (இம்முறையும்) மனதைக் கொள்ளையிட்டது!

  ReplyDelete
 16. இயற்கைதான் முதல் கவிஞர், ஆசிரியர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

  ReplyDelete
 17. Syed Ibramsha..
  தங்களின் முதல் வருகையும் அழகிய பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 18. அகிலா ...
  வணக்கம் சகோ ,முடிவிலா பயணத்தை நோக்கி செல்கிறது .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 19. மகேந்திரன் ...
  அண்ணாவிற்கு என் அன்பு கலந்த வணக்கம் . தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 20. சென்னை பித்தன் ..
  நாகரீக மோகம் கற்க மறுக்கிறது .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 21. ஹேமா ..
  ஆம் சகோ தங்கள் கருத்து உண்மையே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 22. இயற்கையைப் பார்த்துதான் மனிதன் பாடம் படித்ததாக சொல்கிறோம்.ஆனால் இப்போதோ படித்த பாடத்தை மறந்து விட்டு,அழிவை நோக்கி செல்கிறோம் என்பதை அருமையாய் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. Seeni ..
  தங்களின் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 24. கணேஷ் ..
  வருக வசந்தமே இயற்கையை புரிந்து கொள்வதைவிட அழிக்காமல் இருக்க முயற்சி செய்வார்களா ?தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 25. விச்சு..
  தங்களின் அழகான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 26. வே.நடனசபாபதி ..
  தங்களின் அழகான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 27. எத்தனைதான் பாடங்கள் இருந்தாலும் அனுபவப் பாடத்தின் வாயிலாகவே அனைத்தையும் கற்றுக்கொள்வான் மனிதன்..

  அப்போதும் தன்னுடைய இயல்பினை மாற்றாமலேயே , மண்ணில் மடியும் சில மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்..!!


  இயற்கையின் பாடங்களை ஒவ்வொன்றாய் அழகுத் தமிழில் அணிவரிசை செய்தமை மிக நன்று.

  பாராட்டுகள் சகோதரி...!!!

  ReplyDelete
 28. இயற்கை மனிதனுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்க தயராய் இருக்கிறது

  ஆனால் மனிதன் கற்றுக் கொள்ள மறுக்கிறான்

  இயற்கையில் இருந்து நிறைய படிப்பினைகளை கவிதையாக கொடுத்திருக்கிறீர்கள்

  ReplyDelete
 29. தங்கம் பழனி ..
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 30. யுடான்ஸ், உலவு இரு திரட்டிகளிலும் இணைத்திருக்கிறேன் ஏற்கனவே இணைக்காமல் இருந்தது

  ReplyDelete
 31. ஹைதர் அலி ...
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 32. ஹைதர் அலி
  மிக்க நன்றி நட்பே .

  ReplyDelete
 33. இயற்கை நமக்கு சிறந்த ஆசானாய் இருக்கிறது என்பதை அழகாய்ச் சொல்லும் கவிதை. அழகு சகோ.

  ReplyDelete
 34. துரைடேனியல்
  தங்களின் வலைச்சரப் பணிக்கு நடுவிலும் வருகை தந்து வாக்கிட்டமைக்கு மனமகிழ்ந்து நன்றி கூறுகிறேன் .

  ReplyDelete
 35. இயற்கையை சீரலிக்கும் மனிதனின் செயலைச் சீர்மிக்க கவிதையால் சிறப்பாக்கி விட்டீர்கள் தோழி!

  ReplyDelete
 36. வணக்கம்! காட்டாற்று வெள்ளமாய் குதித்தெழுந்த கவிதை. முடிவில் அன்பை போதிக்கும் அமைதியான நீரோடையாய் மாறுகிறது.

  ReplyDelete
 37. நேற்றைய என் பின்னூட்டத்தைக் காணாமல் வருந்துகிறேன். இதோ மீண்டும்...

  சமூகவியல் நோக்கோடு சூழலியலையும் கருத்தில் கொண்டு புனையப்பட்ட இந்த ஒரு கவிதைக்குள் எத்தனைப் பாடங்கள். அத்தனைப் பாடங்களையும் அழகுக் கவிதைக்குள் புகுத்திய விந்தை கண்டு வியக்கிறேன். அவற்றை நம் மனத்தினுள்ளும் புகுத்திக்கொண்டால் மனிதம் மகோன்னதமாய்த் தழைத்திடும். பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
 38. // பாடம்தான் படைப்பெல்லாம்,
  படித்து சீரடைவோமா!-இல்லை,
  நாட்டையும்,வீட்டையும்,
  சுடுகாடாய் மாற்றி-மடிவோமா//

  கற்பனையில் முத்தெடுத்து
  கவிநயமாய் சொல்தொடுத்து
  சிற்பமென மனக்கதவில்
  செதுக்கியதும் பாடந்தான்!

  பொற்பனையக் கருத்தெடுத்துப்
  போதனையாய் அதைமுடித்து
  கற்பவர்க்கு ஒவ்வொன்றும்
  கற்றுத்தரும் பாடந்தான்

  அருமை மகளே!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 39. பாடம்தான் படைப்பெல்லாம்,
  படித்து சீரடைவோமா!-

  பாடமாய் கவிதைப் படைப்புக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 40. தனிமரம்...
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 41. கீதமஞ்சரி ...
  தங்கள் பின்னூட்டத்தை காணாமல் நானும் நேற்று தேடினேன் . எனது மின் அஞ்சலில் மட்டும் பார்த்தேன் நன்றி கூற தேடித் தேடித் தோற்றேன் . நன்றி சகோ .

  ReplyDelete
 42. தி.தமிழ் இளங்கோ...
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 43. இராஜராஜேஸ்வரி...
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 44. புலவர் சா இராமாநுசம்
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 45. Seshadri e.s.....
  தங்களின் வருகையும் அழகான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி