Ads 468x60px

Monday, February 27, 2012

கோடை விடுமுறையில் நாம் ..

கோடை விடுமுறை என்றாலே இந்த பசங்கள எப்படி ஒரு மாசம் கட்டி மேக்கிறது தெரியல , என்று அலுத்துக்கொள்ளும் பெற்றோர் நிறைய உண்டு . அதிலும் நிறைய பேர் இருக்காங்க பாருங்க விடுமுறையில்  கூட அவங்கள விடாம கிபோர்ட் , நாட்டியம் , கணினி வகுப்பு இப்படி வியாபார நோக்கத்தோடு  விரட்டும் பெற்றோரும்  இருக்காங்க . 


       இவர்களுக்கு  நடுவே நம் சிறு வயது  கோடை விடுமுறையை நினைத்துப் பாருங்கள் . எத்தனை எத்தனை இனிமை நினைவுகளை அசை போடா சொல்கிறது பாருங்கள் ....
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐந்து, ஆறு குழந்தைகளுக்கு மேல் தான் இருப்பாங்க . கூட்டுக்குடும்ப வாழக்கை அது .

இப்போ நம்ம குழந்தைகளை பார்க்கவே ஆயா வேலைக்கு  ஆள் தேடுகிறோம் .
      திண்ணையில் அடுக்கி வைத்த அரிசி , வேர்க்கடலை , கேழ்வரகு மூட்டைகளில் எலி போட்ட  துளை போதாதென அதில் எங்க லீலையும் சேர்ந்து  எடுத்துப் போயி , குளக்கரை பக்கம் ஒரு கூட்டமே சேர்ந்து ஆக்கும் கூட்டாஞ்சோறு அவ்வளவு ருசியா இருக்கும் பாருங்க .
       அங்க ஆடு , மாடு மேக்கிரவங்க பார்த்துட்டு போயி இன்னார் பிள்ளைங்க இங்க இருக்காங்க என்று செய்தி பரவி அடி வாங்கினது வேறு விஷயம்ங்க .
        எந்த குழந்தையும் அப்பா , அம்மாவ தேடாதுங்க பசி நேரத்திற்கு ஆயா , அத்தை, பெரியம்மா , சித்தி  என்று யார் பந்தி விரித்தாலும் சரி பசியாறி விட்டு மறுபடி லீலைகள் தொடரும் .

          மாலை வேளைகளில் கைராட்டம் , ராஜா ராணி , திருடன் போலீஸ் ,கண்ணாமூச்சி , கபடி , மூக்கில்லி , கில்லி , கொல கொலையாம் முந்திரிக்காய் இப்படி விளையாட்டுப் பட்டியல் நீண்டு கொண்டே போகும் .
               மின்சாரம் தேடாத காலங்கள் . நிலவொளியில் உணவருந்தி , தெருக்களில் படுத்து தேவாரம் , திருவாசகம் கேட்டு விடிந்த பொழுதுகள் .
அடுத்து ஆயா , அத்தை வீடு என அங்கங்கு பத்து, பதினைத்து நாட்கள் தங்கி அங்கு ஒரு நண்பர் கூட்டத்தோடு கொட்டம் தொடரும் .

              விடுமுறை முடிந்து பள்ளிக்கு போனதும்  இப்படி நாம கழித்த  இனிமை நினைவுகளை பேசியே ஒரு மாத காலம் போகும் .  அடுத்த விடுமுறையை எதிர்நோக்கும் நினைவலைகள் .

 மூடிய பள்ளிக்கூடம் விளையாடும் திடலாகும், மாமா வீட்டு  பயணம் பேருந்தும் ரதமாகும், விளையாட்டே போதுமே உயிர்வாழ என்றெனவே தோன்றிடும் காலம். ம்ம்ம் நினைத்தாலே குளிர்கிறதே
என் மனது !!!

43 comments:

 1. படங்களுடன் பதிவினைப் படிக்கையில் எனக்கும் அந்த
  விடுமுறை நாளின் சுகம் மனதில் நிறைந்து போனது
  இப்போது அந்த நாளைக் கூட பெற்றோர்கள்
  பையனை தயார்படுத்தும் நாளாகவே
  கருதுவதால் குழந்தைகளின் அதீத
  மன உளைச்ச்சலுக்கு காரணமாகிப் போகிறது
  என நினைக்கிறேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நாங்க விடுமுறை முழுவதும் கிரிக்கெட் விளையாடிய தருணம் மறக்க முடியாதது.

  அருமைப்பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 3. ரமணி ஐயா தங்கள் உடன் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 4. DhanaSekaran .S
  கிராமிய விளையாட்டுகளில் ஒரு சுகம் இருக்கும் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 5. இதுவெல்லாம் இந்தக்கால பிள்ளைகளுக்கு கொடுத்து வைக்கவில்லை அல்லது வாய்ப்பில்லை அல்லது வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நம் வீடு, நம் குழந்தை என குறுகிய வட்டத்தில் வாழப்பழகிவிட்டோம்.

  ReplyDelete
 6. மிகவும் அருமை சசி,,,,,
  என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர துளிகள்.....!!

  ReplyDelete
 7. பாடசாலை நினைவோடு ஊரின் நினைவும் வந்துவிட்டது சசி !

  ReplyDelete
 8. ungal azhakaana vari!

  thiruppaiyathu palli naatkalai!
  manathu kulirnthathu!

  ReplyDelete
 9. ungal azhakaana vari!

  thiruppaiyathu palli naatkalai!
  manathu kulirnthathu!

  ReplyDelete
 10. விச்சு..
  தங்கள் கருத்து உண்மையே மறுக்கப் படுவதே உண்மை .

  ReplyDelete
 11. shanmuham Dhana
  ஆமாம் நம்ம பள்ளி நாட்களை நினைத்தால் கண்ணீர்தான் மிஞ்சுகிறது .

  ReplyDelete
 12. ஹேமா...
  ஆமா சகோ பசுமை நினைவுகள் .

  ReplyDelete
 13. Seeni ...
  மறக்க முடியாத மனதிற்கு இதம் தரும் நினைவுகள் .

  ReplyDelete
 14. உங்கள் பார்வையின் இந்த ஏக்கம் படிப்பவருக்கு பெருமூச்சும்,ஏக்கத்தையும் தூண்டும்.இந்த பதிவும் கவிதையாய் தெரிகின்றது.

  ReplyDelete
 15. thirumathi bs sridhar..
  மலரும் நினைவுகளை பூட்டி வைக்காமல் பகிர்ந்து கொள்வோமே ...

  ReplyDelete
 16. படங்கள் கதைகள் சொல்லுது
  நன்றி சகோதரி

  ReplyDelete
 17. மிகவும் அருமையாக உள்ளது...இதைப்பற்றி நானே ஒரு பதிவிடலாம் என்றிருந்தேன்...மிக அருமை

  ReplyDelete
 18. இந்தக்கால பிள்ளைகளுக்கு கொடுத்து வைக்கவில்லை...ம்ம்ம்ம்ம்ம்ம்...

  ReplyDelete
 19. நாம் அனுபவிக்காத பல வசதிகளை இன்றையக் குழந்தைகள் அனுபவிக்கிறார்கள். அதனால் அவர்கள் இழந்தவை அதிகம். நினைத்துப் பார்த்து மகிழ அவர்களுக்கு இப்படியொரு குழந்தைப்பருவம் இல்லையே என நினைக்கையில் வருத்தம்தான் மேலிடுகிறது. அழகான படங்களுடன் அழியாத அந்தக்கால நினைவுகள் மனம் தொட்டன சசிகலா.

  ReplyDelete
 20. பகிர்வு அருமை.பழைய நினைவுகளை தூண்டி விட்டீர்கள்!

  ReplyDelete
 21. தென்றல்ல்ல்! நான் இளமையில் விளையாடிய சில விளையாட்டுக்களை இன்றைய குழந்தைகள் அனுபவிக்காமல் வீடியோ கேம்ஸில் புதைந்து விடுகிறார்களே என்ற ஆதங்கம் எனக்குண்டு. (என் பதிவில் எழுதியும் இருக்கிறேன்). அழகான படங்களுடன் இங்கே படி்க்கையில் கொஞ்ச நேரம் என்னை மறந்து மாணவப் பருவத்தில் வாழ்ந்தேன்! அதற்காக மகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்!

  ReplyDelete
 22. வணக்கம் !
  இனிமை !இனிமை !
  என்னை, சிறு வயதிற்கு அழைத்துச்சென்று விட்டீர்கள் !
  அருமை ! மேலும் தொடர வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 23. கோடை விடுமுறை பற்றியும் அதை அனுபவிக்கும் முன்னய கால சிறுவர்களையும் தற்கால சிறுவர்களையும் ஒப்பிட்டு கூறியுள்ளீர்கள் மிக நல்ல பதிவு....

  ReplyDelete
 24. ஹைதர் அலி...
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

  ReplyDelete
 25. சிட்டுக்குருவி ..
  பதிவிடுங்கள் காத்திருக்கிறேன் .

  ReplyDelete
 26. ரெவெரி ..
  அதில் நம் தவறும் இருக்கலாம் அல்லவா.

  ReplyDelete
 27. கீதமஞ்சரி ...
  தங்கள் கருத்து மிகவும் சரியே சகோ . நம்மால் , வளரும் நாகரீகத்தால் நம் குழந்தைகள் இழந்தவை அதிகமே .

  ReplyDelete
 28. ஸாதிகா...
  நம் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வோமே .

  ReplyDelete
 29. கணேஷ் ....
  வருக வசந்தமே அந்த பதிவையும் தென்றலிடம் பகிர்ந்திருக்காலாமே .

  ReplyDelete
 30. AMK.R.PALANIVEL
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 31. Esther sabi..
  வருக சகோ தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து இருக்கலாமே .

  ReplyDelete
 32. ஸ்ரவாணி...
  நம்மில் பசுமை நினைவுகள் இருக்கின்றன . நம் பிள்ளைகளிடையே ..?

  ReplyDelete
 33. அப்படியே என்னை பழையகாலத்திற்குள் இட்டு சென்ற உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். இனிமையான காலம் அது

  ReplyDelete
 34. நாம் கழிச்ச கோடை விடுமுறையை அப்படியே கண்ணுக்குள்ளே கொண்டு வந்துட்டீங்க. நம்ம பிள்ளைகள் இதையெல்லாம் அனுபவிக்க கொடுத்துவைக்கலைன்னுதான் நான் நினைச்சுக்குவேன்

  ReplyDelete
 35. அந்தக்காலத்தில் லீவுக்குப் போவது என்று ஒரு வழக்கம்!நான் விடுமுறையில் என் அம்மாவின் சித்தி வீடுகளுக்குப் போவேன்.மறக்க முடியுமா அந்த நாட்களை?(ஒரு பதிவு தேறும் போலிருக்கிறதே!)
  பகிர்வுக்கு நன்றி,

  ReplyDelete
 36. வண்ணத்தை குழைத்து வானவில் வரைந்த அந்த காலங்களை நினைவில் நிறுத்துகின்றது உங்களின் இந்த பதிவு .. நன்றிகள

  ReplyDelete
 37. சசிகலா! உங்களை ஒரு தொடர்பதிவினைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

  http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_28.html

  நன்றி!

  ReplyDelete
 38. வணக்கம்! ஆத்தோரம் மணல் எடுத்து, அழகழகாய் வீடு கட்டி விளையாடிய நாட்கள் இனி வருமா? அருமையான நினைவுகள், நினைக்க மட்டுமே இனிக்கும். இயல்பான நடையில் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 39. மாலை வணக்கம் அக்கா

  ReplyDelete
 40. மாலை வணக்கம் அக்கா

  ReplyDelete
 41. puliyankottaiya kanavillaiye!!!! Yenn Yenn Yenn?

  ReplyDelete
 42. puliyankottai means (Tamarind Seeds) which we collected and play with it. There used to be 1000s of them and played by around 4 -5 people of both genders and one seed goes up and before it comes down, you have to collect as much as you can which were spread over the floor without disturbing the adjacent seed.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி