Ads 468x60px

Friday, February 10, 2012

நானும் எனது ஊரும் (தொடர்பதிவு)

 தோழர் சங்கவி அவர்கள் தொடர் பதிவு எழுத அழைத்ததின் படி நானும் எனது பிறந்த ஊர் பற்றி எழுதுகிறேன் .
                           கோவிலுக்கு பெயர்போன திருவண்ணாமலை மாவட்டம், அதை அடுத்து பல  கிலோ மீட்டர் தொலைவில் “வந்தவாசி” அங்கிருந்து நடைபயண தூரத்தில் எங்கள் ஊராம் “அம்மையப்பட்டு” கிராமம்! .

ஊரின் பெயர் சொல்லும் தொழிலாக- பாய் நெய்தல் , நெசவு நெய்தல் , விவசாயம் மேலும் சிறப்பு “அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாய் கூடிவாழ்ந்து,பாரதத்தாய் பெற்ற பிள்ளைகளாய்!! .
எங்கள் கிராமத்தில் மணிவிளக்காய் கொண்டாடும் “ஊறணிப்  பொங்கல் திருவிழா” காண கண்ணிரெண்டு போதாது . . ஒவ்வொரு வீடாக மேளதாளத்துடன் ஊர்வலமாய்ச் சென்று, ஒவ்வொரு வீட்டு மகளிரையும் பொங்கல் கூடையுடன் அணி வகுத்து அழைத்து செல்லும் அழகைக் காண
        வெளி ஊரில் தங்கி இருக்கும் அன்பர்களும் தவறாமல் வந்து போவர் . அன்று இரவு உலா வரும் அம்மன் சிலையின் பூ அலங்காரத்திற்கு நிகரேதும் இருக்காது .
        கார்த்திகை திருநாளில் எங்கள் ஊர் மலைக்கு மாட்டு வண்டியிலும் , வயல் வழி நடந்தும் வந்து தவள கிரி நாதரை தரிசித்து போக வரும் மக்கள் கூட்டத்திற்கு அளவேயில்லை .
        இவ்விதம் ஒவ்வொரு பண்டிகை கால நிகழ்விலும் கரகாட்டம் , கூத்து , பள்ளிக்குழந்தைகளை பரவசப் படுத்தும் பாட்டு , நடன , இசைக் கச்சேரி,விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு என் இரவைப் பகலாக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் கலை  கட்டத் தொடங்கும் .
        என்ன அவசரமானாலும் ..
        பிடித்த பாடலை ...
        கேட்பதை போல ...
        நின்று கேட்டுவிட்டு ...
        பின்பு நகர்கிறேன் ...
        'புறப்பட தயாராய் இருக்கும் ...
        தடம் எண் 104 '..... என்ற எங்கள் ஊர் பேருந்து அறிவிப்பை .
        இப்படி எங்க ஊருக்கு போகும் பேருந்தையே அத்தனை ஆவலோடு பார்த்து செல்வேன். எனை ஊர் பற்றி எழுதச் சொன்னால் இனிமையாகத்தான் உள்ளது .
        மாமரத்து குயில் ஓசை,
        மஞ்சு விரட்டிய மைதானம்,
        மலர் தேடும் வண்டுகள்,
        ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரம்,
        ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து
        போகும் ஒற்றை பேருந்து!
        குதிக்க பயந்து குதித்தோடிய
        குட்டித் திண்ணை!
        திருவிழாக் கூட்டத்தில்
        தொலைத்த பகைமை!
        தினம் தினம் நீச்சல்
        பழகிய ஆழ்கிணறு!
        ஆற்றங்கரையில் ஆக்கிய
        கூட்டாஞ்சோறு!
        ஆயாவின் சுருக்குப்பை!
        இப்படி எதுவும் இந்த பட்டினத்தில் இல்லை,
        உன்னிடம் சுட்டிகாட்டி மகிழ...

        இப்படி எனது எண்ணங்கள், எப்போதும் எனது  ஊரைப் பற்றியே இருக்கும் .

       அதிகாலைக் கதிரவனை,
      வரவேற்க காத்திருக்கும்,
      நெசவுப் பாவுஉறவணிந்த,
      எங்கள் ஊராம் "அம்மையப்பட்டு" .
      நினைக்கையில் இனிக்கிறதே!
     நெஞ்சம் நாடிப் போகிறதே!!
    ஆலமரத்தடி தனிலே,
    அழகாய் அமர்ந்த "நாகவள்ளி",
    அவளை குளிர்வித்து சீராட்ட,
     அருகே ஒட்டிய குளக்கரையும்!
     மூங்கில் காற்று தாலாட்டு பாட,
     குளத்தில் மீன்கள் கும்மியடிக்க,
     ஆனந்தவாழ்க்கை பாடியதே!
      தலைவன் இன்றி;ஒழுக்கத்தோடு,
     சாரையாய் ஊரும் எறும்புபோன்று,
     இணைபிரியா சங்கிலியாய்,
     எங்கள்வீட்டுத் திண்ணைகள்!
     வாசல் தோறும் வரவேற்கும்,
     தென்னை மரங்கள் சொரிகின்ற,
    வெள்ளைப் பன்னீர் பூத்துளிகள்!
     வழக்குரைக்க பஞ்சாயத்து ,
     ஆலமரத்து வண்டினங்கள்.
     பள்ளி வளாகம் கண்ணுற்றால்,
     பார்வையால் கவர்ந்திடும்,
     அழகு பூங்கா;"குயில்பாட்டு"
     அதனை தொடர்ந்து,
     மலையடிவாரம் காண்,!
      வாக்கால் வரப்பில் ஓடியாடும்,
     ஏரி நீரும் ; துள்ளித்தாவும்,
     தவளைகளும் .....
     ஏர் மாடு பூட்டி ,
    எதிர் காலம் வாழத்தேயும் உழவர்களும் ...
     கண்டாங்கி சேலை கட்டி,
     களையெடுக்கும் தாயின்,
      "மழலைகளை" ஆலமரத் தொட்டிலிலே
      தூங்க வைக்கும் தென்னன்காற்றும்!
     முனைப் நெல்லின் கதிர் பிடுங்கி,
     பாலை ருசிக்கும்
     சிறுவர் பட்டாளமும்!
     மீன் தேடி காத்திருக்கும் கொக்குகளும்,
     எல்லையில்லா மகிழ்ச்சி தரும்
     ஊர் விழாவும் .. மாலை நேரம்
     மலைகளின் ஆழம் தங்கிடும் மேகம் ..
     விடிந்துபார்த்தால்!
     மலை மட்டும் தனியாய் ..
    கதிரவனை தாங்கி நிற்க!!
    அன்று அப்படி!இன்று நிலைஎதுவோ?
                     
        அனைவருக்கும் தனது சொந்த ஊரைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும்  என்ற எண்ணம் மனதில் இருக்கும். அதற்காகவே நான் இப்போது தொடர்  பதிவு  சார்பாக அழைக்கிறேன். நான் தொடர் பதிவிற்கு அழைதவர்களெல்லாம்   எல்லாம், நீங்களும் 10 பேரை தொடர்பதிவுக்கு அழைத்து அனைவரையும் அவர்கள் கிராமத்து நினைவுகளை மலரவைக்க வேண்டுகிறேன்.
                     வசந்த மண்டபம் மகேந்திரன்
                    அரசன் சே
                     விமலன்
                     விச்சு
                     தமிழ் இளங்கோ
                    சீனி
                   குணா தமிழ்
                   ராஜி
                  துரைடேனியல்
                  ராஜா சந்தரசேகர்
இன்னும் நிறைய நண்பர்களை அழைக்கவேண்டும் இத்தொடர்பதிவிற்கு நான் அழைத்த நண்பர்கள் அனைவரும் குறைந்த பட்சம் 10 பேரையாவது தொடர்பதிவிற்கு அழைக்க வேண்டுகிறேன்...

61 comments:

 1. வணக்கம்! எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர் மறவாத தங்களது நீங்காத நினைவுகள்.

  //மாமரத்து குயில் ஓசை,
  மஞ்சு விரட்டிய மைதானம்,
  மலர் தேடும் வண்டுகள்,
  ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரம்,
  ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து
  போகும் ஒற்றை பேருந்து!//

  என்று கவிதை முழுக்க பாரதிதாசன் வழியில் அழகின் சிரிப்பு. சொந்த ஊர் பெருமை பேசப் பேச பெருமைதான். எழுதுவோம்.

  ReplyDelete
 2. சங்கவி என்னையும் இதனை தொடர அழைத்துள்ளார். எழுதணும்

  உங்க ஊர் பற்றி மட்டுமல்ல உங்கள் ப்ளாகும் சங்கவி மூலம் இப்போது அறிமுகம் ஆனது

  ReplyDelete
 3. தி.தமிழ் இளங்கோ
  வணக்கம் இளங்கோ அவர்களே தங்கள் வருகையும்
  பின்னூட்டம் கண்டும் மகிழ்ந்தேன் . தங்கள் தொடர் பதிவிர்க்காய் காத்திருக்கிறேன் .

  ReplyDelete
 4. கண்டிப்பாக சகோ. தங்கள் அழைப்பை ஏற்று நானும் இந்த தொடர் பதிவில் பங்கேற்று எழுதுகிறேன். ஏற்கனவே ஒரு பதிவு இதைப்பற்றி எழுதியுள்ளேன். அதன் URL கீழே. நேரமும் வாய்ப்பும் இருந்தால் படித்துப்பாருங்கள். நன்றி.

  http://www.duraidaniel.blogspot.in/2011/12/blog-post_22.html

  ReplyDelete
 5. உங்கள் இப்பதிவு அருமை. கவிதை மழையில் நனைந்தேன் உங்கள் ஊர்ப்பெருமையோடு. நன்றி.

  ReplyDelete
 6. உங்கள் ஊரில் உங்களோடு கைகோர்த்து உலாவிய ஒரு உணர்வு.அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள் சசி.வாழ்த்துகள் !

  ReplyDelete
 7. தங்கள் ஊரின் சிறப்புக்களும் அதனை எழுதிய விதமும் அருமையாகவும் கவிதை நடையிலும் உள்ளது.

  ReplyDelete
 8. உங்கள் ஊரை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். படித்ததும ஒருமுறை இந்த ஊரைப் பார்‌த்து வர வேண்டும் என்று தோன்றிவிட்டது சசிகலா மேடம்!

  ReplyDelete
 9. மோகன் குமார்
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தொடர்ந்து வரவேற்கிறேன் .

  ReplyDelete
 10. துரைடேனியல்.....
  தங்கள் பதிவை சென்று பார்த்த பின்பே பின்னூட்டம் இடுகிறேன் .
  அங்கு நான் கண்ட காட்சி.....

  ஆள் மெலிந்திருந்தாள்
  அய்யோ பாவம் என்றிருந்தாள்

  அவளின் வனப்பை
  காலம் திருடியிருந்தது

  அவளின் கூந்தல்
  வெட்டப்பட்டிருந்தது

  அவளின் மரப்பூக்கள்
  பறித்தெறியப் பட்டிருந்தன
  வாசித்து கொண்டிருக்கும் போதே கண்களின் ஓரம் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது . இயற்கையை சேதப் படுத்தும் மனித நேய மற்ற அரக்கர்களை என்ன செய்வது அருமை . உங்கள் தொடர் பதிவிக்காய் காத்திருக்கிறேன் .

  ReplyDelete
 11. வாங்க ஹேமா ..
  தங்களோடு கரம் கோர்த்து மலையடி வாரத்தை சுற்றி வருவோம் .

  ReplyDelete
 12. விச்சு..
  வருகை கண்டு மகிழ்ந்தேன் தங்களை தொடர் பதிவிற்கு அழைத்தேன் மறந்துவிடாதிர்கள் .

  ReplyDelete
 13. கணேஷ்...
  நல்வரவு கணேஷ் அவர்களே . இயற்கை வளமோடு செயற்கை வனப்பும் கூடிக்கொள்ள இன்முகத்தோடு வரவேற்கிறது எங்கள் கிராமம் வருக வருக . மேடம் என்று அழைக்க வேண்டாமே .

  ReplyDelete
 14. R.ரவிச்சந்திரன்
  அவர்களே நல்வரவு வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் .

  ReplyDelete
 15. மிக அழகான எழுத்து நடையில், உங்கள் ஊரை நேரில் கண்டது போல் உள்ளூர ஒரு மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. சத்ரியன்
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

  ReplyDelete
 17. உங்கள் ஊரைப்பற்றி கட்டுரையாக எழுத சொன்னேன் ஆனால் நீங்கள் கவிதையாக எழுதி எங்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிவிட்டிர்கள்..

  உங்கள் ஊரும், உங்கள் கவிதையும் அருமை...

  உங்கள் பதிவை படிக்க படிக்க உங்கள் ஊர் என் எண்ண ஓட்டத்தில் இருக்கிறது...

  தொடர் பதிவெழுதியற்கு மிக்க நன்றி...

  நீங்க உங்க நண்பர்கள் 10 பேரை தொடர்பதிவெழுதுவதற்கு அழைத்ததற்கு மிக்க நன்றி... நீங்கள் அழைத்ததை அவர்களுக்கு தெரிவியுங்கள்...

  மிக்க நன்றி....

  ReplyDelete
 18. மிகவும் அழகானதொரு வர்ணனை சசி.
  லயித்தேன். வெகு சிறப்பு.

  ReplyDelete
 19. சங்கவி..
  வருக வணக்கம் வனப்பு மிகு எங்கள் வந்தை நகருக்கு தங்கள் "மீண்டும் மீண்டும்" என்கிற வார்த்தை எழில் சேர்க்கிறது மிக்க நன்றி .

  ReplyDelete
 20. ஸ்ரவாணி..
  அழகு நிறைந்த எங்கள் கிராமத்திற்கு தங்கள் வருகை மேலும் அழகு சேர்த்தது நன்றி தோழி .

  ReplyDelete
 21. சொந்த ஊர் எப்போதுமே அழகுதான்..தோழி பதிவின் மூலம் அழகுக்கு அழகு எற்றியிருக்கிறீர்கள்..

  ReplyDelete
 22. யோவ்...
  அவர்களே வருகை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 23. அன்புத் தங்கை சசிகலா,
  அருமையான கட்டுரைக்கவி எழுதி இருக்கீங்க.
  ஊர்ப்பெருமை பேசுவது என்றால் நமக்கெல்லாம்
  அச்சுவெல்லம் சாப்பிடுவது போல தான்.
  கவிதையை ரசித்து படித்தேன் பா.

  என்னையும் எழுத அழைசிருகீங்க
  கண்டிப்பா எழுதுறேன்.

  ReplyDelete
 24. வணக்கம் அக்கா,
  ஊரின் சிறப்புக்களையும், ஊருக்கேயுரிய அருமை பெருமைகளையும் அழகுற மண் வாசனையுடன் சொல்லி நிற்கிறது இப் பதிவு.

  நன்றி.

  ReplyDelete
 25. வணக்கம் மகேந்திரன் அண்ணா
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . உங்கள் தொடர் பதிவிர்க்காய் காத்திருக்கிறேன் . நன்றி அண்ணா .

  ReplyDelete
 26. பூங்கதிர் ...
  தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி நண்பரே .

  ReplyDelete
 27. தம்பி நிருபன் ...
  வருக வருக தங்கள் வரவு நல்வரவாகட்டும் .

  ReplyDelete
 28. ஆட்டோக்ராப் அருமை !

  ReplyDelete
 29. எண்ணங்கள், எப்போதும் எனது ஊரைப் பற்றியே இருக்கும் .

  தென்றலாய் வீசிய நினைவுகள் அருமை..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 30. உங்களின் ஊரை பற்றி இவ்வளவு அழகாக படம்பிடிதாற்போல் வரிகளில் செதுக்கி வழங்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ...
  என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி .. விரைவில் நானும் எனது ஊரின் பெருமையோடு உங்களை சந்திக்க வருகிறேன் .. நன்றி

  ReplyDelete
 31. அழகான பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 32. ஆனந்து ...
  அவர்களே வணக்கம் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 33. இராஜராஜேஸ்வரி...
  தென்றலை உணர்ந்து ரசித்தமைக்கு , எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் .

  ReplyDelete
 34. அரசன் சே..
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

  ReplyDelete
 35. மதுமதி..
  அவர்களே வணக்கம் தங்கள் வருகையும் பின்னூட்டமும் மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 36. தனசேகரன் ..
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 37. அருமையாக இருக்கிறது... இடையில் கவிதையை மிகவும் இரசித்தேன்...

  ReplyDelete
 38. ஊர் ஞாபகங்கள் எப்போதும் சுகமான நினைவுகள் தாலாட்டுது உங்கள் பதிவு.

  ReplyDelete
 39. சகோ. தொடர்பதிவு எழுதி விடடேன். வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 40. சுபேஸ் ..
  அவர்களே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 41. தனிமரம் ..
  அவர்களே தங்கள் வருகையும் பின்னூட்டமும் தென்றலைத் தாலாட்டிப் போனது . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 42. துரைடேனியல்..
  தங்கள் பதிவை கண்டேன் ரசித்தேன் அருமை சகோ .

  ReplyDelete
 43. உங்கள் ஊர் சிறப்புக்களையும் பொங்கல் விழாவையும் கண்டு மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 44. மாதேவி..
  அவர்களே தங்கள் வருகை எங்கள் ஊருக்கே எனை அழைத்து சென்றது போல் இருக்கிறது . வருக வருக .

  ReplyDelete
 45. வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!

  ReplyDelete
 46. வணக்கம்! உங்கள் எண்ணப்படி எனது ஊர் (திருமழபாடி) பற்றி ஒரு பதிவினை எழுதியுள்ளேன். கட்டுரை எழுத கருப்பொருள் ஒன்றினைத் தந்த தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 47. வணக்கம் சசிகலா,
  உங்களுக்கு நிறைய நன்றிகள். இன்றையவானம் பதிவுகளுக்கு தொடர்ந்து கருத்துகளை பதிவு செய்கிறீர்கள். மேலும் வலைச்சரத்தில் இன்றையவானம் வலைப்பூ அறிமுகம் செய்ததற்கும் சேர்ந்து. தென்றல் வலைப்பூ பார்த்தேன் கவிதைகள் மிக அருமை.உங்கள் சொந்தஊர் கட்டுரை படித்தேன்.வந்தவாசி சொந்தஊர் என்றால் தோழர் வெண்ணிலா,மு.முருகேஷ் தெரியுமா?.
  அன்புடன்
  அ.தமிழ்ச்செல்வன்

  ReplyDelete
 48. சொந்த ஊரை பற்றி சொல்வதென்றாலே எல்லோருக்குமே எப்போதுமே சந்தோசம் உடல்முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போலத்தான் இருக்கும். உங்களது பேச்சிலும் அந்த மின்சாரத்தின் ஒளியை பார்க்க முடிகிறது.. வாழ்த்துக்கள்... ஊரின் பெருமையை பகிர்ந்து கொண்டதற்கு....சசிகலா..அவர்களே...

  ReplyDelete
 49. // 'புறப்பட தயாராய் இருக்கும் ...
  தடம் எண் 104 '..... என்ற எங்கள் ஊர் பேருந்து அறிவிப்பை .
  இப்படி எங்க ஊருக்கு போகும் பேருந்தையே அத்தனை ஆவலோடு பார்த்து செல்வேன்.

  எனை ஊர் பற்றி எழுதச் சொன்னால் இனிமையாகத்தான் உள்ளது .// ;)))))

  தங்கள் ஊரைப்பற்றிய இந்தக்கட்டுரை மிகவும் சுவைபடவும், உணர்வு பூர்வமாகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 50. அவரவர்களுக்கு அவரவர் ஊர் என்றால் ஒரு தனி பாசம் ஏற்படுவது இயற்கயே!

  சென்ற ஆண்டு ஜூலை மாதம் எங்கள் சொந்த ஊராம் திருச்சியைப்பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

  தலைப்பு:

  “ஊரைச்சொல்லவா! பேரைச்சொல்லவா!!”

  நேர அவகாசம் இருந்தால் படித்துப்பார்த்துக் கருத்துக் கூறுங்கள்.

  ReplyDelete
 51. நானும் எனது ஊரும் தொடர் பதிவு அசத்தல்! என்னை யாரும் அழைக்கவில்லை, இது போல தொடர் பதிவு எழுத! ஒரு வகையில் நீங்களும் எங்கள் மாவட்டக்காரர்தான் (முன்பு வாடார்க்காடு மாவட்டம்).அதனால் வாழ்த்துக்கள் பல!

  ReplyDelete
 52. அதனால என்னங்க நாமே நம்ம ஊர் பற்றி என்ன தவறு. தங்கள் பதிவுக்கு க◌ாத்திருக்கிறேன்.

  ReplyDelete
 53. வந்தவாசி பா ஜெயக்குமார் என் ஃபிரண்டு.. அம்மையப்பட்டு??

  ReplyDelete
 54. மிக இனிமையான வாசிப்பு அனுபவம்

  ReplyDelete
 55. உங்களூர் மிகக்சிறந்த விவசாய பகுதி என்று தான் நினைத்தேன் மேலும் நெசவு தொழிலுக்கும் சிறந்தது என்பது இப்போதுதான் உங்களின் தொடர்மூலம் தெரிந்து கொண்டேன்..நன்றி

  ReplyDelete
 56. வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ..

  http://blogintamil.blogspot.in/2013/02/2.html

  ReplyDelete
 57. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி