Ads 468x60px

Thursday, February 2, 2012

தண்ணீரின் தாகம்

“கிணரென்ற நீரூற்றின்,
கருவறையை காயப்படுத்தி,
கல்லறையாய் ஆக்கிவிட்டோம்.
ஆழ்கிணறு பெயராலே;
அவலத்தை அரங்கேற்றி ,
பூமித் தாய் மடிதன்னை,
சுடுகாடாய் மாற்றிவிட்டோம்.
காடுகளை அழித்திங்கே,
மழைத்துளி விரட்டிவிட்டோம் ,
குளமெல்லாம் சாக்கடைகள் ...
ஆற்றுப் படுகை கோபுரமாய்,
காற்று தேடும் அவலங்கள்.
ஊண்; உடை இல்ல...
அழுக்கு மட்டுமல்ல
உறுப்பிலுள்ள அழுக்குகளையும்
சுத்த படுத்தும்  நீரெங்கே !

நாவரண்டு ..
உமிழ் நீரும் சற்று ஓய்வு தேடுகையில்,
நீரை கைமோர்ந்து அள்ளிப்,
பருகும் தமிழ் குலமெங்கே.?
அடை மழையின் போதெல்லாம்
அலுத்து சலித்துகொள்கிறோம்,
மண்ணில் நடக்க மனம் கூசி!
புல்வெளி தரைக் கெல்லாம் ,
புதைகுழி தேட ...தண்ணீரின்
துணை நாடி, அறிவின்றி, ..
சிமெண்ட் சாலை அமைக்கின்றோம்
 


அழகாய் படரும் முல்லைக் கொடிக்கும்,
அடுக்கு மாடி எல்லை என்றோம்.
அலைகடல் நீர் எடுத்து,
அருந்தவும் வழியில்லை.
வானம் பொய்க்க வில்லை,
வினை நாம் விதைத்ததுவே!
அடுத்த வீட்டு தாகம் தீர்க்க,
கையளவு கொடுக்க மாட்டோம்.
அண்டை மாநிலம் நோக்கியே,
கையேந்தி நிற்கின்றோம்.
இரவில் மட்டும் இருட்டில்லை,
பகலும் இருண்டு கிடக்கிறது.
தண்ணீர் இன்றி மின்சாரம்
எங்கே தேடி ஓடுவது  ..?
சசிகலா

22 comments:

 1. அழகாய் படரும் முல்லைக் கொடிக்கும்,
  அடுக்கு மாடி எல்லை என்றோம்.
  அலைகடல் நீர் எடுத்து,
  அருந்தவும் வழியில்லை.
  வானம் பொய்க்க வில்லை,
  வினை நாம் விதைத்ததுவே!

  மிக மிக அழகாக ஏக்கம் சொல்லும் வரிகள்.அழகான கவிதை வாழ்த்துகள்

  ReplyDelete
 2. தண்ணீர் இல்லாப் பிரச்சனை இனி வருங்காலத்தில் இருக்குமென்றே சொல்கிறார்கள்.சங்கடமான விஷ்யம் சசி !

  ReplyDelete
 3. jrose1985144, dhanasekaran .S& ஹேமா
  தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 4. ஆதங்கமாகத்தான் இருக்கிறது

  ReplyDelete
 5. thagamaai tediya thannir kavithaiyithou
  vegamai sonnir vedithou!

  ReplyDelete
 6. வணக்கம்!
  //அடை மழையின் போதெல்லாம்
  அலுத்து சலித்துகொள்கிறோம்,
  மண்ணில் நடக்க மனம் கூசி! //

  கொஞ்சம் மழை என்றாலும் திட்டிக் கொண்டே நடக்கும் நகரத்து மனிதர்களைப் பற்றிய விமர்சன வரிகள்.

  ReplyDelete
 7. இரவில் மட்டும் இருட்டில்லை,
  பகலும் இருண்டு கிடக்கிறது.
  தண்ணீர் இன்றி மின்சாரம்
  எங்கே தேடி ஓடுவது ..?

  அருமையான கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. தண்ணீர் பஞ்சத்தின் நிலையிலைச் சாடிவந்த கவிதை அழகு.

  ReplyDelete
 9. பெய்யும் மழையைப் பிடித்துவைக்கச் சொன்ன அறிவுரையும் அலட்சியப்படுத்தி, கன அடிக் குழிமட்டும்வெட்டி கண்துடைப்புக் காட்டிய மக்களின் அறியாமை கண்டு மனம் வெதும்புவதைத் தவிர வேறென்ன செய்வது? சேமிப்பு பணத்தில் மட்டுமல்ல, நீரிலும் இருக்கவேண்டும். யதார்த்தம் உரைக்கும் கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 10. thirumathi bs sridhar,AROUNA SELVAME,தி.தமிழ் இளங்கோ,Ramani,தனிமரம் & கீதா வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் .
  நம் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டோம் மக்களை சென்றடைவது எப்போது ?

  ReplyDelete
 11. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.தண்ணீர்,தண்ணீர் என தவிக்கப்போகிற நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை கவிதை உண்ர்த்திச்செல்கிறது.

  ReplyDelete
 12. தண்ணீர் பற்றிய கவிதை..இரண்டு நாட்களுக்கு முன்பே வாசித்துவிட்டேன்..கருத்திட முடியவில்லை.இன்றுதான் மீண்டும் வர முடிந்தது..அவசியமான பதிவு.இனிமேலாவது உணருவோம்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. நல்ல கவிதை!

  மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் நான்கூட பேய்மழை எனும் கவிதை ஒன்றை என்னுடைய வலைப்பூவில் இட்டுள்ளேன்.நேரம் கிடைக்கும்போது படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்.
  என்னுடைய வலைப்பூ முகவரி www.esseshadri.blogspot.com

  நன்றி!
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 14. விமலன் ,மதுமதி &Seshadri e.s. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும்
  எனது மனமர்ர்ந்த நன்றி

  ReplyDelete
 15. தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்க நேரிடும் என்று என் அப்பாவிடம் சொல்லியிருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார். இன்றோ... நிதர்சனம். அது மட்டுமா... திண்ணை வைத்த வீடுகள் போய்விட்டன. கிணறு என்பது பெரும்பாலும் இல்லை. நகர மயமாக்கலில் நாம் இழந்தது தான் எத்தனை எத்தனை... நினைக்கையில் வலி ஏழுகிறது. சிந்தனைக்கு விருந்தாய் நற்கவி படைத்த உங்களுக்கு ஹேட்ஸ் ஆஃப்!

  ReplyDelete
 16. இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
  காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

  ReplyDelete
 17. அருமையான கவிதை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. மதி அவர்களே
  தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 19. விசு அவர்களே
  எனது மனமார்ந்த நன்றி. வலைச்சரம் வந்தேன் வாக்கிட்டேன்.

  ReplyDelete
 20. கணேஷ்
  அவர்களே தங்கள் பின்னூட்டம் படித்த உடன் என் கிராமத்து நினைவுகள் வந்தன . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 21. "`Versatile Blogger Award ". மனமகிழ்வுடன் இதனை உங்களுக்கு வழங்குகிறேன்.
  http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி