Ads 468x60px

Sunday, January 1, 2012

விருப்பமில்லை எனக்கு

ஆங்காங்கே சிதறிக்கிடக்கும்
உறவுகள் ஒன்று கூடும் ...
குலதெய்வ வழிபாடு ....
பங்காளி , கொண்டான் குடுத்தான் என
எல்லா உறவுகளும் ஒருசேர
ஒரு வாரத்திற்கு முன்பே
கலந்து பேசி தேதி குறித்து ...
பயணத்திற்கு என வாகனமும் தயார் செய்து
சிரிப்பு , கூத்து கும்மாளம் குதூகலம் என
கல கல வென தொடரும் பயணம்
பால்ய நினைவுகளை
அசை போடும் அத்தை மாமாக்கள்
அந்த காலத்துல நாங்க இப்படியா ......
என அலுத்துக்கொள்ளும் தாத்தா பாட்டிகள்
அம்மா எடுத்து வைக்க மறந்த
இலைகட்டுக்கு இரைச்சலிடும் அப்பா
சமாதான படுத்தி அமரும் சித்தப்பாக்கள் .
இவர்களின் கவனத்தை எல்லாம்
திசை திருப்பும்
பாட்டுக்கு பாட்டு நிகழ்வும் ,
பரிகாச நடனங்களும்
அவ்வப்போது நாம் போகும் பாதையை
உறுதி செய்ய ஜன்னலோர இருக்கைக்கு
சண்டை இடும் சகோதர உறவுகள் ...
ஒவ்வொரு நிறுத்தத்திற்கான
அடையாளங்களும் அழியாமல் உள்ளன என்பதை
என உறதி செய்யும் உரையாடல்கள் ....
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ
நம்மை கடந்து போகும்
பசுமை நிகழ்வுகளை காண முடியாமலும்
உள்ளம் மகிழ
உறவுகளுக்குள் உழன்று கொண்டிருக்கும்
உல்லாச பொழுதுகளையும் ...
ஒட்டு மொத்தமாய் பிடுங்கி தின்றுக்கொண்ட
பெருமிதத்தில் சத்தமிடும்

இந்த வண்ணத் திரைப் பேருந்தில் பலிகொடுக்க
உடன் எடுத்துச் செல்லும் ஆட்டுடன்......
பயணிக்க சற்று கூட விருப்பமில்லை எனக்கு .
சசிகலா

40 comments:

 1. மகிழ்ச்சிகள் எல்லாம் பலி ஆடாய்ப் போவதில் யாருக்குத்தான் விருப்பம். ஆனாலும் பலி கொடுப்பதும் நாம்தானே.

  ReplyDelete
 2. நான் எழுதும் வலைப்பூவில் உங்கள் கமெண்ட் மூலமாக உங்களின் தென்றல் வலைப்பூவுக்கு சென்று சின்ன சின்னதாக பூத்திருக்கும் கவிதைகள் சிலவற்றை படித்தேன். நன்றாக உள்ளது. நீங்கள் பத்திரிகைகளுக்கு எழுதுவீர்களா என்று தெரியாது. எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் வாழ்த்துக்கள். அப்படி இல்லை என்றால் தினமலர்-பெண்கள் மலர், மங்கையர் மலர், கல்கி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் முயற்சிக்கலாம் என்பது என் கருத்து.

  ReplyDelete
 3. மனசாட்சி,எல் கே,G.M Balasubramaniam,சரண்
  அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 4. பலியாடு பாவம்
  இவங்க வேண்டிகிட்ட பவம் அது என்ன பண்ணும்?

  நல்ல கவிதை

  ReplyDelete
 5. இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ
  நம்மை கடந்து போகும்
  பசுமை நிகழ்வுகளை காண முடியாமலும்
  உள்ளம் மகிழ
  உறவுகளுக்குள் உழன்று கொண்டிருக்கும்
  உல்லாச பொழுதுகளையும் ...
  ஒட்டு மொத்தமாய் பிடுங்கி தின்றுக்கொண்ட
  பெருமிதத்தில் சத்தமிடும்
  இந்த வண்ணத் திரைப் பேருந்தில் பலிகொடுக்க
  உடன் எடுத்துச் செல்லும் ஆட்டுடன்......
  பயணிக்க சற்று கூட விருப்பமில்லை எனக்கு//
  .
  அழகானஅசத்தலான
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நிவாஸ் &Ramani ஐயா மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 7. வணக்கம்!

  //இந்த வண்ணத் திரைப் பேருந்தில் பலிகொடுக்க
  உடன் எடுத்துச் செல்லும் ஆட்டுடன்......
  பயணிக்க சற்று கூட விருப்பமில்லை எனக்கு .//

  தமிழ்த்தாயின் விரல் பிடித்து கொல்லாமையைச் சொல்லாமல் சொல்லிய தங்கள் உள்ளம் வாழ்க!

  ReplyDelete
 8. மிக்க நன்றி தமிழ் இளங்கோ அவர்களே

  ReplyDelete
 9. அன்பு மகளே!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  இரக்க மெனும் குணமில்லார் அரக்கர் என்றார்
  கம்பர்
  தங்கள் பதிவு இரக்கத்தின் எதிரொலியாக
  உள்ளது
  நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  த ம ஓ 5

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மேடம்.

  ReplyDelete
 11. புலவர் சா இராமாநுசம் அவர்களே மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 12. என். உலகநாதன் அவர்களே மிக்க நன்றி

  ReplyDelete
 13. உண்மைதான்,சசி...சில சௌகரியங்களால் நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போகிறது....

  ReplyDelete
 14. என்ன செய்வது..

  கடிகாரம் மட்டுமே நம் கையில்
  காலத்தின் கையில்தானே பலநேரம் நாம்...

  ReplyDelete
 15. ஆதங்கம் மனதை இழைத்த கவிதை.வாழ்த்துகள் சகோதரி !

  ReplyDelete
 16. சட்டென தைக்கும் கவிதை.அந்த ஆடு அங்கிருந்து தப்பித்து என்னிடம் வந்து சுற்றுவது போன்ற உணர்வு.சசிகலா உங்கள் மின்னஞ்சல் என் மெயிலுக்கு அனுப்பவும்.நன்றி.

  ReplyDelete
 17. எல்லோர் மனதிலும் உறங்கி கொண்டிருக்கும் உண்மை உங்கள் வரிகளால் விழித்திருக்கிறது அருமை

  ReplyDelete
 18. மனத்தைக் கவர்ந்தது கவிதை.
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 19. அட! என எண்ண வைத்தது கவிதை.

  பாராட்டுக்கள், சசி.

  ReplyDelete
 20. எத்தனை மகிழ்ச்சியான தருணம்! எதிலும் மனம் ஒட்டாமல் பலியாட்டின் நிலை கண்டு பரிதவிக்கும் மனம் சொல்கிறதே மனத்தின் ஈரத்தை. நெகிழும் நெஞ்சம் நீடூழி வாழ்க.

  ReplyDelete
 21. அகிலா,guna thamizh,ஹேமா,ராஜா சந்திரசேகர்,
  viswanathanchidambareswaran ,
  மகேந்திரன் ,
  சத்ரியன், கீதா
  வருகை தந்து வாழ்த்திய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

  ReplyDelete
 22. பல நினைவுகளை தட்டி செல்கிறது உங்கள் கவிதை....வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 23. உண்மைதான் சசி . ஆனால் என்னதான் விஞ்சானம் நம்மை இயக்கினாலும்
  அதன் கட்டுப்பாட்டு இயக்கம் நம் கையில் அல்லவா இருக்கிறது.
  நெடுந்தூர பயணத்தில் இது இருக்கலாம் ஒரே ஒரு படம்
  என்ற கட்டுப்பாடோடு. கவிதை கரு & சொன்னவிதம் அருமை.

  ReplyDelete
 24. ஸ்ரவாணி அவர்களே மிக்க நன்றி

  ReplyDelete
 25. 100 விழுக்காடு உடன்படுகிறேன்!பயணத்தின் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் செய்யும் ஒரு குறுக்கீடுதான் வீடியோ.

  ReplyDelete
 26. ஜெயக்குமார் & சென்னை பித்தன் அவர்களே வருக வருக தங்கள் வாழ்த்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள்

  ReplyDelete
 27. கடைசி வரிகள் உணமையிலேயே மிகவும் அருமையாய் இருந்தன! கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஒரு நல்ல அனுபவத்தை இழந்திருப்போம்! தொடர்ந்து இதுபோலவே எழுதுங்கள்!

  ReplyDelete
 28. அப்புறம் என்ன ஆச்சு...ஆட்டை பலி கொடுத்தீங்களா இல்லையா..?

  ReplyDelete
 29. உங்க ஏக்கம் புரிகிறது.,.என்ன பண்றது....குல தெய்வ கோவில் என்றாலே கிடா இல்லாமலா....?

  ReplyDelete
 30. கோவை நேரம் ..
  தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் .

  ReplyDelete
 31. இரக்கமும் வேண்டும் இன்பமும் வேண்டும் இதுதான் வாழ்க்கை அதுதான் பயணம்

  ReplyDelete
 32. ஆஹா! மிக மிக அற்புதமான கவிதை, இன்று இந்த பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கு பார்த்துவிட்டுதான் வந்தேன். சூப்பர்.

  அருமையா எழுதி இருக்கீங்க இதுநாள்வரை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

  ReplyDelete
 33. தங்களின் உண்மையான மன உணர்வுகளை மென்மையாகச் சொல்லியுள்ளீர்கள். என் மனமார்ந்த் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  இன்று 28.12.2012 வலைச்சரம் மூலம் இதைப்படிக்கும் வாய்ப்புப்பெற்றேன்.
  வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு என் நன்றிகள்.

  இதே கருத்தினை என் சிறுகதை ஒன்றில் கூறியுள்ளேன், ஆனால் வேறு விதமாக. முடிந்தால் படித்துவிட்டு கருத்துக்கூறுங்கள். இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_874.html

  அன்புடன்
  VGK

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி